என்ன தேசம் இது

என்ன தேசம் இது ..!!jQuery17107292591762607417_1640998786829

இன்று இறந்த நம் வட இந்திய சகோதரர் சரப்ஜித் சிங்ன் மரணம் நம் எல்லோறையும் அதிர்ச்சியடைய செய்ததும் , வருத்தத்தில் ஆழ்த்தியதும் உண்மைதான்.செய்யாத ஒரு தவறுக்காக அவர் பட்ட துன்பங்களும் அவரது முடிவும் ,அவர் குடும்பத்தின் சோகமும் சொல்லில் மாளாது ..

மிக முக்கியமாக அவர் இறந்துடன் மதிய அமைச்சரவையில் மிக உயர்ந்த பதவியில் உள்ள அமைச்சர்கள் , தலைவர்கள் நேரில் அவர் வீட்டுக்கு சென்று அவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதும் அவர் குடும்பத்திற்கு தேவையான எல்லா உதவியையும் அரசு செய்யும் என்று கூறியது ஒரு தமிழனாய் என் இதயத்தை சுட்டது... அவர் தன் குடி போதையில் நம் நாட்டின் எல்லையை தாண்டி எதிரி இடம் மாட்டிக்கொண்டவர்...அவரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் 28 தோட்டாக்கள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது ..

என் இதயத்தை வருடும் வினா ..

நம் தமிழகத்தில் நம் மீனவ நண்பர்கள் எத்தனையோ பேர் தினம் தினம் இலங்கை ராணுவத்தால் கடல் எல்லை தாண்டாமலையே சுடப்படுவதும்..கொல்லப்படுவதும் ...சிறைபிடிக்கப்படுவதும் ..ஒரு தொடர்கதையாகவே உள்ளது..நம் மதிய அரசு இலங்கை வாழ் தமிழர்களை தான் மீட்கவில்லை ....நம் தாய் திருநாட்டில் வாழும் தமிழர்களை ஏன் காப்பதில்லை ??? தன் வயற்றில் பிறந்த பிள்ளைகளிடம் வேறுபாடு காட்டினால் அவள் தாயா ??? நாள்தோறும் இலங்கை ராணுவத்தால் இறக்கும் நம் தமிழ் மீனவ நண்பர்களுக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படவேண்டும் என்றால் எத்தனை எத்தனை தோட்டாக்கள் முழங்க வேண்டும் என மத்திய அரசு சிந்திகுமா??
செய்யாத தவறுக்காக அயல் நாட்டு சிறையில் மாண்ட நம் இந்திய தமிழர்கள் எத்தனை எத்தனை பேர் ..??!!!

இதை படிக்கும் ஒவ்வொரு நெஞ்சும் வருந்தும்மானால்....

தமிழன் என்ற உணர்வு வெறும் பேச்சில் மட்டும் இல்லாது ...பேசும் மொழியோடு முடியாது உங்கள் உணர்வுகளிலும் இருக்குமானால் . தயவுசெய்து இதை உங்கள் தமிழ் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

இன்று நாம் விதைக்கும் விதையில் நாளை நம் எதிர்காலம் நிம்மதி அடையலாம்
விதை விதைப்போம் தமிழனைக் காத்திட இன்று......

நெஞ்சின் வலியோடு

இவன்

எழுதியவர் : jeevan (4-May-13, 6:19 am)
பார்வை : 210

சிறந்த கட்டுரைகள்

மேலே