சிட்டிவாழ்வி(ய)ல்

நீ போன கட்டவண்டி
நான் போகும் ஷேர் ஆட்டோ

நீ ஆடிய பல்லாங்குழி
என் பாக்கெட்டில் மொபைல் கேம்..

உன் திண்ணைப் பேச்சு சம்பாசனைகள் ...
என் ஆன்லைன் சாட்டிங்...

உன் மண்ணடுப்பு
என் மைக்ரோவேவ் உடனடி சமையல் ..

உன் பானை என் வேர்ல்பூல்
உன் ஆத்தங்கரை என் வாஷிங் மசின்..
...............................................

காலார நடக்கலாமென
ஊரிலிருந்து வந்த ஓர்நாளில்
கேட்கிறாய் நீ -
அடுக்கு மாடியின் பெட்டி வீட்டிற்குள்
அதெல்லாம் எதற்கு என்பேன் நான்...!

எழுதியவர் : நிலாநேசி (4-May-13, 8:40 pm)
பார்வை : 83

மேலே