பால கிருஷ்ணன்!!!
குழந்தை போல
வேண்டுவேனே என்
குட்டி நண்பன்
வென்றிடவே!!!
விரதம் இருப்பேன்
வேண்டி நிற்ப்பேன்
வெண்கல குரல்
கொண்ட என்
செல்லம் வென்றிடவே!!!
மறக்காமல் பறப்பேனே
அவன் வென்ற
செய்தி கிட்டியதும்!!!
என் கண்கள்
ஆனந்தத்தில் நனைந்திடவும்
வருட கொண்டாட்டங்களில்
இன்னும் ஒன்றை
கூட்டவும், இலக்கை
நோக்கி பயணப்படும்!!!
என் அன்பு
பாலக்ருஷ்ணன் வெற்றியடைய
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகிறேன்!!!
அளவில்லாமல் அன்பை அள்ளித்தரும் அன்பு நண்பர்களே,
நமது உயர்.திரு.செல்வன்.பாலக்ருஷ்ணன் அவர்கள் இன்று(06.05.2013) இரவு விஜய் தொலைக்காட்ச்சியில் வரவிருக்கும் நிகழ்ச்சியான தமிழ் பேச்சு என் உயிர் மூச்சு எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இறுதி தேர்வு அளிக்க சென்னையை நோக்கி பயணப்படுகிறார்
அவரின் பயணம் நல்ல படியாய் அமையவும்,
போட்டியில் அவர் வெற்றி பெற்று நம் தமிழுக்காய் அவர் பேசவும்,நாம் அதை பார்த்து ரசித்து மகிழவும்
வாய்ப்பு அளிக்கும் படி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
அன்புடன் நவீன் மென்மையானவன்