மரங்கள்
நான்
உங்களுக்கு முன் பிறந்த
சகோதரன்
உங்கள்
முச்சுக் காற்றின் மூலம்.
ஆயிரமாயிரம்
பறவைகளின் தாய் வீடு
நீ
உண்ண கனி நல்கும்
அமுத சுரபி
நீ முகர
நறுமலர் தரும்
வள்ளல் நான்
மழை நீரை
தடுத்து
மண்ணில் வைத்திருப்பவன்
சூரிய பையன்
சுடாமலிருக்க
நிழல் தரும் கொடை நான்
உன் வசிப்பிடங்களுக்காக
என்னை வெட்டுகிறாயே
என்னில் வசிப்பவர்களை
என்ன செய்வது
தலைவனின் கட்டளைக்காக
என்னை வெட்டி
சாலை மறியல் செய்யும் சகோதரனே
நாளை வேனிலில்
அவதிப்படுவது நீயல்லவா !
என்னை தொட்டு
தடவிவரும் தென்றலை
அனுபவிக்காமல்
காங்கரீட் காடுகளில்
கண்புதைக்கிறாயே
நீ ஊற்றிய நீருக்காக
நிழலையும் வாசமலர்களையும்
வண்ணக் கனிகளையும்
தந்தவன் நான்
நீயோ அவற்றை
உண்டு விட்டு
நாற்றமடிக்கும் கழிவுகளை
தருபவன் நீ
என்னை வளர்க்கும் போது
நீ வாழ்கிறாய்
என்னை வெட்டும் போது
உனக்கு சவக்குழி தோண்டுகிறாய்
உன்னால் நானும்
என்னால் நீயும்
இணைவது லாபம்
நீ வாழ என்னை வெட்டுவது
என்ன நியாயம்?