ஹைக்கூ-கவிதை ஓவியங்கள்

---உண்மையான ஹைக்கூ கவிதைகள்-2----

ஜப்னீஸ் முன்னணி ஹைக்கூ கவிதைகள்
18-நூற்றாண்டின் பிற்பகுதியில் டானிகுச்சி என்றழைக்கப்பட்ட யோசா புசோன் என்ற ஓவியரால் எழுதப்பட்டன என்பதைவிட வரையப்பட்டன....
உண்மையில் அவர் ஜப்னீஸ் உருவகமாக ஹைக்கூ ஓவியங்கள் வரைந்தார்...

ஒரு வௌவால் சிறகடிக்கிறது
நிலவொளியுள்ள பிளம் மலர்கள் மேல்.

இந்த ஹைக்கூ ஓவியம் உன்னதமானது....
காதலைப்பற்றி சொல்லியிருப்பாரோ....?

இன்னொன்று விசித்திரமானது....

குளிர்கால ஆற்றில் மிதந்து வருகின்றன
புத்தருக்கு வழங்கப்பட்ட மலர்கள்

இங்கே கடவுளைப் பற்றி சொல்கிறாரே
கொஞ்சம் பகுத்தறிவு வாசம் வீசுகிறதே!

இப்படி வார்த்தைகளால்
ஓவியம் வரைந்தார்கள்
ஓவியங்களில் வார்த்தைகளை வடித்தார்கள்...
உண்மையான ஹைக்கூ கவிஞ்சர்கள்


...............................(இன்னும் வரும்)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (27-May-13, 1:36 pm)
பார்வை : 135

மேலே