உடலினைப் போற்றுவோம் [4]

கசப்பான இனிப்பு
*****************************
எது
நமது கட்டுப்பாட்டில் இருந்து
விலகுகின்றதோ
அது
நமது முதல் எதிரியாகின்றது.
*******

எது
நம்மை
கவனிக்க வைக்கின்றதோ
அது
நமக்கு வேலை கொடுக்க
தயாராக இருக்கின்றது.
*******

மேற்கண்ட கவிதையினை படியுங்கள்... கொஞ்சம் வேறு கோணங்களிலும் மாற்றிப் படியுங்கள். இரு மாறுபட்ட பொருளும் அர்த்தமும் இருப்பதை உணராலாம். மனதுக்கும் உடலுக்கும் பொருந்தும்.

அதாவது... எதாவது?
தளத்தின் நண்பர்களுக்குப் போய் விளக்கம் சொல்ல வந்தேனே... சரி புரிந்து கொண்டீர்களா?
*******************

சமீபத்தில் சென்னையில் இருந்து புதிய இயக்குனரான எனது நண்பர் என்னுடன் பேசிக் கொண்டு இருந்த போது உடல் நலம் பற்றி விசாரிக்கையில் தனது இடைவிடாத வேலைப் பளுவினால் அல்சர் வந்து அவதிப்படுவதாக கூறி சில ஆலோசனைகளை கேட்டார். அவருக்கு சொன்ன ஆலோசனைகள் நமக்கும் இது பயன்படட்டுமே என்று இங்கே பதிவு செய்கிறேன்.

அவர் உடல் நலக் குறைவிற்கான காரணங்கள்
*************************************************************************
1. இடைவிடாத சிந்தனை
2. மூளைக்கு ஓய்வின்றி தொடர் ஆலோசனை
3. நெருக்கடியான சூழல்
4. ஓய்வற்ற பணி
5. உணவு மறந்த உழைப்பு
6. 24 மணி நேரமும் மன இறுக்கம்
7. அறுதியான தூக்கம்., ஆகியன ஆகும்.

இப்படி மேற்கண்ட ஏழாக நடந்து கொண்டால்தான் திறம்பட வேலை செய்கிறோம் என்று அர்த்தமா?
இப்படி நடந்து கொண்டால்தான் நாம் வேலையை விரைவில் செய்து முடிக்க முடியும் என்று அர்த்தமா?

இந்த இரண்டுமே இல்லை. இந்த இரண்டால் அந்த ஏழு கொடுக்கும் பரிசு நோய். மன நோய் உடல் நோய் என்ற என்பதாக அமைகிறது. இயக்குனரின் காட்டுப்பாட்டில் அவரது உடலும் மனமும் இல்லை என்பது தெரிந்து சில அறிவுரைகளை வழங்கினேன்.

பறவைகள் போல் தூங்கி எழ வேண்டும்.
" முன் தூங்கி முன் எழுவது "
என்ற நான் பகுத்த மந்திரத்தை பின் பற்றுவது. அதாவது., முடிந்தவரை இரவு 9 மணிக்குள் தூங்க முயற்சி செய்வது.
தூங்கும்போது கனவுகளற்ற ?? குழப்பமற்ற நிம்மதியான தூக்கமாக இருக்க வேண்டும்.

[இதெல்லாம் இந்தக் காலத்திற்கு ஒத்துவராது என்றுதான் சொல்லத் தோன்றும். நமக்கு வந்தால் நம் தான் அனுபவிக்க வேண்டும். எல்லா தொந்தரவுகளையும் அனுபவித்துக் கொண்டுதானே இருக்கின்றோம்.
மாத்திரை தான் நிறையப் பேருக்கு உணவாகவும் இருக்கின்றது.]

தூங்கும் முன் நல்ல கதைப் புத்தகங்கள் பக்திப் பாராயணங்கள் படிக்கலாம் அல்லது வானொலியில் பாடல்கள் கேட்கலாம் நாம் பதிவு செய்து அன்றாடம் கேட்கும் பாடல்களைவிட வானொலி கேட்பதால் எதிர்பாராத பாடல்களால் மன அமைதி கிடைக்கும்.

இந்த அலாதியான தூக்கம் உங்களை காலை 5 மணிக்கெல்லாம் புத்துணர்வுடன் எழுப்பிவிடும். முடிந்தவரை 6 மணிக்குள் எழுந்து விடுவது சாலச் சிறந்தது. 7 மணி வரையும் தூங்குபவர்கள் பிற்காலத்தில்
அ] உடல் சோர்வு
ஆ. மன நலக் குறைபாடு
இ] உடல் பருத்தல்
ஈ] எதிலும் நாட்டமற்ற ஈடுபாடு
எ] சிந்தனைக் குறைபாடு ஆகிய பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடும்

எப்போதுமே பசித்தபின்பு உண்பது சிறந்து. என்றாலும் காலை 9 மணிக்குள்., மதியம் 1 மணிக்குள்., இரவு 8 மணிக்குள் முடித்துக் கொள்வது சாலச்சிறந்தது.
ஆனால் நான் ரொம்ப பிசி, நான் எப்போ சாப்டரேன்னு எனக்கே தெரியாது என்பதெல்லாம் வெட்டிப் பெருமைக்குத்தானே தவிர உடலுக்கு நன்மையில்லை.
ஒவ்வொரு உறுப்பும் தனக்கென்று சக்தியை சேமிக்கவும் இயங்கவும் நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. இது நாம் அறிந்திடாத அதிசயம்.

மேலும் இடைப்பட்ட நேரங்களில் கண்டதை உண்பதை நிறுத்த வேண்டும் இல்லையேல் உபாதைதான். நீராகராமாக வேண்டுமெனில் எடுத்துக்கொள்ளலாம்.
இன்னொரு முக்கியமான விசயம் சிறுநீர் மலம் கழிக்கும் எண்ணம் வரும் நேரத்தில் வெளியேற்றாமல் அதிக நேரம் தேக்கி வைப்பது பல நோய்களை உருவாக்கும் காரணமாக அமைகின்றது.

இறுதியாக... நண்பரிடம்., அவரையே உணவை சமைத்துச் சாப்பிடச் சொல்லி விட்டேன். அவர் கொஞ்சம் சங்கடப்பட்டாலும் நிலைமை கவலைக்கிடம் என்பதை புரிந்து கொண்டு ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் இருக்கும் அவரிடம் பேசும் சந்தர்ப்பம் வந்தபோது சொன்னார்... அவரின் உதவியாளர்கள் சமையல் வல்லுனர்களாக மாறிவிட்டதாகவும்., சென்னை வந்தால் அவரின் கையால்தான் சாப்பாடு என்றும் சொன்னார்.

இதென்னாடா சோதனை என்று சிரிப்பாய் வந்தாலும் கேட்பதற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இரவில் 10 மணிக்கு தூங்கி விடுவதாகவும் காலையில் 6 மணிக்கு முன்பே எழுந்து விடுவதாகவும் மனமும் உடலும் இயல்பாய் இருப்பதாகவும் எடிட்டிங் வேலை சுலமாய் போவதாகவும் சொன்னார்.

எனக்கும் பெருமையாக இருந்தது.

எல்லாவற்றையும் நாமே உருவாக்குகின்றோம்
உருவானவை நம்மையே பணியாளனாக்குகின்றது
போராடிக்கொண்டே இருக்கின்றோம்
இயற்கை நம்மிலிருந்து விலகுகின்றது !!

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (1-Jun-13, 5:18 pm)
பார்வை : 371

மேலே