[446] பணிந்தவனாய்க் கேட்கின்றேன்..! (கலிவிருத்தப் பா வகை)

+++பணிந்தவனாய்க் கேட்கின்றேன்! +++

மூர்க்கன்,எனைப் பலகாலம் முன்,நின்று காப்பவனே!
பார்க்கின்ற பேர்க்கு,எல்லாம் பலநன்மை கொடுப்பவனே!
வேர்க்கின்றன் விட,ஆசை வெளிவருமுன் தடுப்பவனே!
ஆர்க்கின்ற தமிழால்.உன் அடிபுகழ வைப்பாயே!................... (1)

நீக்கம்.அற நின்றிருக்கும் நிர்மலனே! உனை,எனது
பாக்களினால் நான்பாடிப் பணிந்தவனாய்க் கேட்கின்றேன்;
ஆக்கமுடன் செயல்படவும், அதிகாரம் பணவசதி,
வாக்குயர, உடல்நலமும் வாய்த்திடவே ஆதரிப்பாய்!......... (2)

நோக்குயர்ந்த பொருளாலே நூறுகவி தினம்எழுத,
வாக்கதனைப் படிப்பவர்கள் வாழ்வினிலே தாம்சிறக்க,
சீக்கு,அழிந்த சமுதாயம் சீக்கிரமே பிறக்கட்டும்!
தேக்கமெலாம் நீங்கட்டும்! திறமைகளும் வளர்ந்திட்டும்!...... (3)
******+****** ******+****** ******+****** ******+******

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (2-Jun-13, 7:41 am)
பார்வை : 77

மேலே