[447] 'போன்சாய் மரங்கள் !'....

இந்தியக் குடிகள்
'போன்சாய் மரங்கள்'!
திட்டம் என்னும்
தொட்டிகள் உள்ளே
மானியம் என்ற
உரங்களைத் தின்றே
அரசியல் கத்திரிக்
கோல்களின் கீழே
அடங்கிக் கிடக்கும்
ஆன்மா அவர்கள்!
இந்தியக் குடிகள்
'போன்சாய் மரங்களே'!
***+*** ***+***

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (2-Jun-13, 7:49 am)
பார்வை : 84

மேலே