நாளை உனதே

காற்றை துணையாக்கு
கடலை மையாக்கு - உணர்வு
ஊற்றை எழுத்தாக்கு
உலகை உனதாக்கு
நேற்று இழந்தவற்றை-நூல்
நூற்று நெசவு செய்தால்
நாளை எனும் சேலை-உனக்கு
நலமாய் அமையாது
தோற்று வீழ்ந்தாலும்
உடல் துவண்டு நலிந்தாலும்-உன்னை
தேற்றும் மனவுறுதி -அதை
திடமாய் வளர்த்துவிடு.
ஏமாற்றம் களைந்து விடு
எதிர் நீச்சல் தொடங்கிவிடு -புது
தோற்றம் பொலிந்து நிற்கும்- புலர்
காலைப் பொழுதுனக்கு!

எழுதியவர் : சிவநாதன் (3-Jun-13, 10:14 am)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 170

மேலே