காதல் வலி

இதயத்தின் பரப்பெல்லாம்
படர்ந்திருக்கும் பாரம்
பாசம் தான் சுமப்பதினால்
பாகுபாடில்லா சோகம்;

நெஞ்சை கீறும் நஞ்சு
நேசம் என்னும் பஞ்சு;
பிழிந்தெடுக்கும் வலியில்
சொட்டுவது
கண்ணீர் துளிகள் மட்டுமே !

அடைக்கப்பட்ட உணர்வுகள்
அடிக்கடி உதைக்க
மனதில் எழும் ரணத்தை
முகத்தில் கொஞ்சம் மறைக்க
உதடுகள் நடத்தும் சிறிய நாடகம்
சிரிப்பு !

கவலை கண்ணில் தெறிக்கும்
கதைகள் காயங்கள் மறைக்கும் ;
தவணை முறையில் தவிக்கும்
தலையணை மட்டும் நனைக்கும் ;

ஒரு பொட்டு தூக்கமும்
வடிகெட்டு போகும் ;
பசி கொண்ட வயிறில்
பச்சை தண்ணீர் நிறையும் ;

கசக்கிப்போடும் நினைவுகள்
கசக்க வைக்கும் உண்மைகள்
இதயம் குத்தும் இன்பங்கள்
இருட்டில் வாழும் காகங்கள்

கர்ப்ப காலம் குழந்தை சுமக்கும்
அது கூட பத்து மாதம் ;
காதல் குழந்தை
சுமப்பவர்கெல்லாம்
காலம் எல்லாம்
பேறுகாலம் !!

எழுதியவர் : Baveethra (6-Jun-13, 9:44 am)
Tanglish : kaadhal vali
பார்வை : 106

மேலே