பட்டாம் பூச்சி பட்டுப் போச்சி

இறக்கையில் பூச்சு
வண்ணமாய்ப் போச்சு
இறக்கையில் பூச்சி
வண்ணம் என்னாச்சி?

அழகான செட்டைதான்
இரையாக மாட்டத்தான்
வண்ணத்துக்காக பூச்சியா?
பூச்சிக்காக வண்ணமா?

மேனியில் இறைச்சி
வனப்பாய்ப் போச்சி
வண்ணத்துக்குப் பெண்ணா?
நல்லெண்ணத்துக்கு பெண்ணா?

கணப்பொழுதில் மணத்திடும்
வானப்பென்ற நினைப்பு
அழகைக் காட்டி எதுக்கு
உலகை ஆட்டும் நடப்பு

இறக்கை - செட்டை, சாகும்போது.
பூச்சு- paint
பூச்சி - insect
மணத்திடும் - நாறிவிடும்

எழுதியவர் : ரூஹுள் razmi (6-Jun-13, 1:32 pm)
சேர்த்தது : roohulrazmi
பார்வை : 82

மேலே