அப்பியாசங்கள்

அப்பியாசங்கள்
==============

ஆக்கைதொட்டு உயிர்ப்பிரித்து
இவைதான் உயிரென்று
உரைத்தல் காண்பித்தல் ஒல்லுமோ

ஆழத்தில் ஆர்ப்பரிக்கும்
ஆழிப்பேரலை நேசமென்றால்
அதற்கென்று தனியொரு உருவந்தானேது

ஏற்றுக் கொள்ளுதலுக்கு
மரபு வேலிகள்
மனிதன் இட்டது மட்டுந்தான் என்றால்

மரபுகள் முந்தி உணருதல்களை
கொன்றுவிடட்டும்
இல்லையேல்
மரபுகள் இறந்துவிடட்டும்

உரிமையுள்ள ஞாபகார்த்தங்களை
புதைப்பதில் அர்த்தங்களில்லை
யாசித்துச்செல்வதில் பிராப்தங்களில்லை

சேமித்துத்தைத்த
உறவுத் தைய்யல்களை
மெதுவாகப் பிரிகின்ற வலியிடத்தில்
காற்று வெற்றிடங்கள்
சுவாச நிரப்புதல்களை மறுக்கின்றன ஏனோ,,,

இரவி மேடைகளின்
இராஜவேடிக்கை கதாபாத்திர
கேலிக் கூத்துக்களின் இடையில்
நாதியற்ற உணர்வோலங்களின்
அபாயச் சங்கிலி எச்சரிக்கைப் பதாகைகள்
ஒவ்வாமைகளின்
ஒருநிலை பண்புகளால்
விதைத்திட வழியில்லாத இடர்ப்பாடுகளேனோ

ஐதானச் சினைப்புகளினால்
விட்டுச்சென்ற நல்லுறவுகட்தனை
அகமனக் குடுவைதனில்
நிரப்பில் சிப்பங்களாக
நிரப்பிவிட மீண்டும் விழைகிறேன்

போறணை சுடுகின்ற
தொடுதிரை நினைவலைகளை
இதயக் காலதரின் வழி
ஊடுரவுகிற அந்தியொளியானது
நைவாளெனக் கொய்திடக்கண்டு
ஆற்றிவிட காத்திருக்கிறேன்
சிறுமழை சிவிறுதலுக்காய்
ஏகோபித்த வெம்மையுடன் ,,,,

ஆம்

ஊசியிலைப் பொறுக்கல்களில்
உணர்வெழுத்துக் கிறுக்கிவிட
மழைப்பாகையில்லாமல் காத்திருக்கிறேன்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (19-Jun-13, 2:31 am)
பார்வை : 154

மேலே