நண்பர்கள் உருவாக்கப் படுகிறார்கள்....!!!! நம் செயலால்....!!!!

அன்பு வேண்டுமா ?
நட்பு வேண்டுமா ?
ஏதாவது ஒன்றைக் கேள் தருகிறேன்
என்றார் இறைவன் என்னிடம்...!!!!
நட்பை கொடு போதும் என்றேன்....!!!!
அன்பில்லாத நண்பன் தேவையா ?
என்றார் இறைவன்....!
நட்பு வந்து விட்டால் அவனால்
அன்பில்லாதவனாக இருக்க முடியாது
என்றேன்....!!!
இறைவனும் என்னுடன் நண்பனானான்.....!!!
இனிமையாய் அன்பை அவனும் பழகினான்...!!!!