என் சுவாசமாய் நீ

உன்னையே எண்ணினேன்
என்னையே மறந்தேன்.....
சொல்ல வார்த்தைகள் இருந்தும்
சொல்ல இயலாமல் நான்....
பாறையில் பூக்கும் பூவாய்
என்னுள் ஒரு ஆனந்தம்......
தனிமையில் சிரிக்கிறேன்.....
உன்னையே தேடி அலையும்
என் நெஞ்சம்.....
என்னை சுற்றி நிகழும்
நிஜங்கள் கூட நிழலாய்
என் முன் வலம் வருகிறது....
காற்றில் இருந்து
என் சுவாசத்தை
தனியே பிரித்து
கொடு....
என் சுவாசமாய் நீ.....
நீ!! காற்றோடு கலப்பதை
தாங்கும் இதயம்
எனக்கு இல்லை..............!!!!!!!!