anaithum neeyada!
உன் மௌனத்தில்
என் காதல் ஜனனம்!
நீ பேசுகையில்
நம் தனிமை மரணம்!
நீ என் காதல்
உலகின் புதினம்!
உன் அன்பே
என் மனதில் பதியம்!
உன் பார்வை
உன் செய்கை மட்டுமே
என்னுள் பதியும்!
உன்னையே நான்
அடைவேன் என் பதி(ஆம்)
நீ என்னில் பாதியல்ல!
நான் என்ன
என்று
புரியாது புரிகின்ற
புதிரும்!
புதிரின் பின்
புலப்படும் பொருளும்
பொருளாகி நிற்கின்ற
உயிரும்
என அனைத்தும்
என் அனைத்தும்
என் காதலனே !
நீ மட்டும் தான்!
நீ மட்டும் தானடா!