தூக்கனாங் குருவி
கையில்லை
சொல்லி கேட்க
வாயில்லை
இருந்தும் நம் போல்
பேசும் மொழியில்லை
உருவமோ பெரிதில்லை
அவற்றுள் கர்வம்
காண்பதற்கு வாய்ப்பேயில்லை
சோம்பலும் அதற்கில்லை
செய்வதில்லை எப்பொழுதும்
பகல் கொள்ளை
அதன் கூட்டைக் கண்டால்
நீரும் சொல்லிடுவீர்
நமக்கு கற்றறிய வேறில்லை.