நட்பின் பிரிவு!!!!!!!!!!!
மனமே மனமே
மறந்து விடு!
மரணம் வந்து மடியிலே
வீழ்ந்ததென்ன-நொடியிலே!
என் பாவம் செய்தேன்?
காலன் வந்து பிரிக்கும் முன்னே
என் நட்பை
காலம் வந்து பிரித்ததே!!!!!!!
சிறகில்லா பறவையாய்
சிந்தனை இல்லா குழந்தயாய்
நாளும் சுற்றி திரிந்தோமே!
நாமும் வாழ்க்கையை இரசித்தோமே!
நண்பா- என்ற சொல்லுக்குள்
தான் என் உலகம் உண்டு
என்பதை மறந்தாயோ நண்பா?
காலத்திடம் சவால் விட்டேன்
முடிந்தால் என் நட்பை பிரித்துப்பார் என்று
காலத்தை நான் வெல்வேன் என்ற நம்பிக்கையில் இல்லை
என்னை நீ தோற்க விடமாட்டாய்
என்ற நம்பிக்கையில்!
என்னை நீ பிரிய மாட்டாய்
என்ற நம்பிக்கையில்!
வாழ்க்கை என்ற செடியிலே
பூவாய் பூத்து
விதையாகி பிரிகிறாயே?
விருட்சங்கள் உருவாகும்
அதில் வியப்பில்லை
காலன் வந்து பிரித்தாலும் பிரியாத
நம் நட்பை
இந்த காலம் வந்து பிரித்ததே???
கடையாணி போதும்,வண்டி சக்கரம் சுழல
என்
கண்ணீர் துளி போதாதா?
உன்னை மீண்டும் அடைய.
வா தோழா கடவுளையும்
நம்மோடு சேர்ப்போம்
நட்போடு வாழ!!
காத்துருக்கிறேன் உனக்காக உன் நட்பிற்காக
இன்றும் என்றென்றும்!!!!!!!!!!!!!!!!!