என்ன பொண்ணுடா இவள்....!!!!

உன்னை பார்த்த நொடியில்
என்னுள் கொதிக்கும் வினா,
நானிருப்பது பூமியிலா இல்லை
பூக்களின் தெருவிலா..??
சாகடிக்கும் உன்னழகில்,
சாக கிடக்கும் என் நிழலும்
சாகசம் செய்ய துடிக்கும்
சாதனை ஒன்றை நடத்தும்...!!
கிறங்க வைக்கும் உன் பேச்சு,
கிட்டத்தட்ட என்னையும்
கிறுக்கு பிடிக்க வைத்து
கிறுகிறுக்க செய்கிறது..!!
என்னென்ன வித்தைகள்
கற்றுக்கொண்டு வந்தாயோ..??
என் திசைகள் எப்போதும்
உன் பக்கமே திரும்புகிறது...!!
இருந்தாலும் இவ்வளவு அழகா..!!
கவிஞனின் வர்ணிப்பில் சிக்காத
வரிகள் அனைத்தையும்
ஒற்றை புருவத்தில் அடக்கி விட்டாயே..!!
நீயும் ஒரு பெண் தானா..??
என்று நான் வினா எழுப்பினால்
அதற்குள் மறைந்திருக்கும்
உண்மை அர்த்தம்
உன் அழகை உயர்த்தி சொல்லும்..!!!
நீ என்னை கடந்து போகையில்
மரணம் கூட இனிப்பு செய்தி தான்,
உன்னை பார்த்து கொண்டே
செத்து விடலாம் இப்போதே..!!
கற்பனை நிறைந்த பிரம்மன்
எங்கு கடன் வாங்கி
உன்னை வடித்தானோ...!!
நிலவு செய்த மீதியிலா..?
ஓவியம் வரைந்த பொழுதிலா..?
பூ அனுப்பிய மீள் பதிவிலா..?
எதுவென்று தெரியாமல்
மூளை குறுக யோசித்து
உன் வாசம் மட்டுமே மிச்சமடி எனக்கு...!!