மனித வாழ்வே புனிதமாகும்

பசித்திடும் உயிர்க்கு உணவும் இல்லை !
பகிர்ந்திடும் எண்ணம் பாரினில் இல்லை
ஈகையும் இரக்கமும் இவ்வுலகில் இல்லை
ஈரமுள்ள உள்ளங்கள் உதவுவதும் இல்லை !
கண்டிடும் காட்சி கல்மனதும் கரைந்திடும்
சுண்டிடும் மனதை தீண்டிடும் உணர்வுகள் !
சிறுவனின் இதயம் இமயமாய் தெரிகிறது
அவன் நெஞ்சத்தின் அருமை புரிகிறது !
இளமை பருவத்திலே இக்குணம் இருப்பின்
இரக்கமும் வளரும் ஈரமும் நிறைந்திடும் !
பரந்த மனங்கள் மழலைமுதலே இருந்தால்
மனித வாழ்வே புனிதமாகும் இறுதிவரை !
இருப்பவர்கள் உதவிடுங்கள் இல்லார்க்கு
இல்லாதநிலை இப்புவியில் நிலைக்கட்டும் !
பழனி குமார்