ஒரு கதை ஒரு குறள் ஒரு ஹைக்கூ (04)

ஒரு கதை
*********
அன்னம் - நம்ம சித்திர வேல் தொலைபேசியில் கதைத்தாரப்பா ...!!! என்ன சொன்னார் ..?
நம்ம வீடு எப்பவும் சந்தோஷமாகவும் சிறப்பாகவும் இருக்க என்ன காரணம் என்று கேட்டாரப்பா மனம் திறந்து ...!!!
நீங்கள் என்ன சொன்னீங்கள் ...?

நான் சொன்னது சிறு விளக்கம் -எமக்கு தேவையான செல்வத்தை பெற போராடி உழைக்கணும் அதில் ஒருபகுதியை தானம் செய்ய மனம் வரணும் தானம் செய்யணும்
தானம் செய்ய செய தானம் செய்தவர்களின் மனம் குளிரும் நாம் மனம் குளிரும் என்றேன் ...!!!
சரியா சொன்னீங்க அப்பா ....!!!

அவரும் சந்தோஷமாக ஏற்று விடை பெற்றார் ....அன்னம் ....!!!

ஒரு குறள்
*********

பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்

ஒரு ஹைகூ
***********

கொடைசெய்
விழுது விட்டு வாழும்
தலைமுறை

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (3-Aug-13, 10:51 am)
பார்வை : 144

மேலே