துயரத்தின் எல்லையோ?

வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டு
தேமே என்று அமர்ந்த்திருக்கிறாள் பேதை
இரவு முழுவதும் வட்ட நிலாவை
உணர்ச்சியேஇல்லாமல் வெறித்து
நோக்கிக் கொண்டிருக்கிறாள் .
மாலை இரவானது இரவு நள்ளிரவானது
அப்பெண்ணோ சிலை போல் சமைந்த்திருக்கிறாள்
கண்ணிலோ நீர் இல்லை.
முகத்திலோ சலனம் இல்லை
உடலிலோ அசைவு இல்லை.
மொத்தத்தில் உயிரே இல்லை
இது தான் துயரத்தின் எல்லையோ ?

எழுதியவர் : மீனா சோமசுந்தரம், (19-Aug-13, 12:32 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 70

மேலே