தாய் வணக்கம்

கருவான நாள் முதல் விழிகளை
இமை காப்பது போல் பாதுகாத்து
பத்து மதமும் பல இன்னல்கள் தாங்கி உன்
உடல் நொந்து உதிரம் துறந்து எனை
இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி
நான் அழுதால் நீ அழுது நான் சிரித்தால்
நீ சிரித்து உன் பசி துறந்து என்
பசியறிந்து அமுதிட்டு நல்மொழிகள்
கூறி நானிலம் போற்றும் நல்லதொரு
குடிமகனாக எனை உருவாக்கிய தாயே
வாழும் தெய்வம் உனை விட யார் இங்கு
வணங்க தக்கவர்......................

எழுதியவர் : shivantg (21-Aug-13, 11:12 am)
Tanglish : thaay vaNakkam
பார்வை : 150

மேலே