என்னவள்

நான் பார்த்த முதல் பார்வையிலே
பெண்ணுலகத்தையே மதிக்கவைத்தவள்
விண்ணுலகில் உலாவும் வெள்ளிவண்ண நிலா போல்
மண்ணுலகில் உலாவுகிறேன் என்னவளுக்காக !
என்னவள் கூந்தலில் விழும் பூக்களை கூட
மடி ஏந்துகிறேன்.
அவள் விடும் மூச்சிகாற்று
காற்றில் கலப்பதால் என்னவோ
காற்றை கூட உணர்கிறேன்.
என்னவள் நெற்றியில் இடும் விபூதி கூட
என் சாம்பலாக இருக்க வேண்டும்...

எழுதியவர் : (26-Aug-13, 11:06 am)
Tanglish : ennaval
பார்வை : 162

மேலே