அகதி வாழ்கை ஏனடா
உயிரற்ற படகை நம்பி அகதியென
படையெடுத்துச் செல்வோரே
உயிருள்ள உங்களின் உடலை நம்புங்கள்
சிங்களவனின் கோட்டைக்குள்
படையெடுத்து செல்வோம்
படகில் ஏறுமுன் எத்தனை கரங்களும்
குரல்களும் உங்களை அழைத்தனர்
என்று நினைவில் கொள்ளுங்கள்
வாடா மல்லியே இன்று நமீழ்த்தில்
வாடியுள்ளது
கார்திகை பூக்கள் காகிதமாகின
பூக்களுக்கு வேலியமைத்தோம் அன்று
இன்றோ நம் மக்களே அவ்வேலிக்குள்
வாடிய பூக்களாகியுள்ளனர்
நாம் அனாதையாகலாம்
நம் ஈழத்தாயை அனாதையாக்கி விடவேண்டாம்
மீண்டும் வாருங்கள் எம் மக்களே
சிங்களவன் கோட்டையை தகர்திட்டு
புலிக்கொடியை நாட்டுவோம்
=== க.பிரபு தமிழன்