தமிழை நேசிக்கிறேன்
தமிழை நேசிக்கிறேன்
அதன் இலக்கியத்திற்காக அல்ல
இலக்கணத்துக்காகவும் அல்ல .
பேசும் மொழிக்காக
சொல்லின் அழகுக்காக
ஒவ்வொரு சொல்லும்
மணியென கணிர்
என்று நம்மோடு
உறவாடுகிறது.
சில சொற்கள்
மிருதுவான கீதம்
போல் வருடுகின்றன.
கொஞ்சுலாமா
சொல்லும் போதே
குழந்தையைக் i கிள்ளி
முத்தம் பொழிந்து
அள்ளி முகர்வதை
கண் முன் நிறுத்துகிறது .
புகழ அருமையான
சொற்கள் உண்டு
நெக்குருகி கசிந்து
கண்ணீர் மல்கி
வேண்ட வார்த்தைகளும்
பல உண்டு.
திட்டவும் திணறடிக்கவும்
மூர்க்கமான சொற்களும் உண்டு
காதலுடன் கவி இயற்ற
பல கவர்ந்திழுக்கும்
சொற்களும் நிரம்ப உண்டு..
எது இல்லை உன்னிடம்
தமிழணங்கே! .
.