கவியரசர் கண்ணதாசன் வருகிறார்...

சிறந்த படித்தவர் என்பதை விட சிறந்த பட்டறிவாளர் தான் கவியரசர் கண்ணதாசன். அவரது கோட்பாடுகள் (தத்துவங்கள்) எவராலும் மறக்க இயலாது. என் வாழ்விலும் அப்படித் தான்.

எடுத்துக்காட்டாக...
எனக்குச் சில எதிரிகள் இருந்தாங்க... அடுத்தவருடன் ஏதாவது முடிச்சுப் போட்டு (கோள் மூட்டி) கொழுவி வைப்பாங்க... அப்படியென்றால் நான் தனிச்சுப் போடுவேன் என நினைத்திருப்பாங்க...

எதிரிகளின் கோள் மூட்டலால் பலர் என்னோடு மோத வருவர். அப்போது, கவியரசர் கண்ணதாசன் வருவார். "ஆயிரம் நண்பர்களை வைத்திரு, ஒரு எதிரியேனும் வைத்திருக்காதே" என நினைவூட்டிச் செல்வார்.

நானும் மோத வருவோரைக் கண்டு ஒதுங்கி நின்றேன். இப்பவெல்லாம் மோத வந்தவர்கள் கூட நண்பர்கள் தான்.

எப்பவும் எந்தச் சிக்கல் வந்தாலும் என்ன செய்யலாம் என எண்ணுவேன். அப்போது கவியரசர் கண்ணதாசன் வருகிறார்... நானும் அவரது கோட்பாடு(தத்துவங்)களைப் பாவித்து வருகிறேன்.

நீங்களும் அறிஞர்களின் நூல்களைப் படியுங்கள். அவர்களது எண்ணங்கள் உங்களுக்கு வழிகாட்டுமே!

எழுதியவர் : யாழ்பாவாணன் (30-Aug-13, 6:18 am)
பார்வை : 68

மேலே