ஷாக்....!!

"வர்ஷினி ! நேத்து படிச்சா ஃபார்முலாஸ் எல்லாம் ஒரு தடவை சொல்லு பாக்கலாம்...ஜடையில் ரிப்பனை வைத்து பின்னிக் கொண்டே கேட்டாள் சௌந்தரி !"
"அம்மா ! எனக்கு ரெண்டு பார்முலாவும் கன்ப்யூஸ்
ஆகுதும்மா !" நறுக்கென்று ஒரு குட்டு வைத்தாள் சௌந்தரி .
"என்னடி எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தேன் ? மாத்தி போட்டுட்டீனா மார்க் போய்டுமே ! எங்க லேடீஸ் கிளப் மீனாவோட பொண்ணு எப்பவுமே செண்டம் தான் ! மீனாவுக்கு ரொம்ப பெருமை ! நீயும் இருக்கியே ...மேக்ஸ்-ல மட்டும் எப்பவும் கோட்டை
விட்டுடறே...! "
கண்ணீர் வழிந்தது வர்ஷினிக்கு ...!
"அழாதடி ...!இரு உனக்கு ஒரு ஐடியா பண்றேன் !
உன் பாக்ஸ்ல ஸ்கேல் பின்னால ரெண்டு பார்முலாவும் எழுதி தரேன் !"
"அம்மா வேண்டாம்மா !மிஸ் பாத்தா பனிஷ்மெண்ட் குடுப்பாங்க ...!"
"ஒண்ணும் தெரியாதுடி ... நீ யார் கிட்டயும் காட்டாதே....!"
சரி ...சரி ... ஸ்கூலுக்கு கிளம்பு ! பை ...பை ... ஆல்தி பெஸ்ட் ..!
வர்ஷினி ஸ்கூலுக்கு போனபின் படுத்துக் கொண்டே பேப்பர் படித்தவள் அப்படியே அசந்து தூங்கி விட்டாள் .
மொபைல் ஒலித்தது .
சட்டென்று விழித்த சௌந்தரியின் கண்கள் கடிகாரத்தைப் பார்க்க மணி பதினொன்று .
"அடடா ...அசந்து தூங்கிட்டேனே ...!"
விருட்டென்று எழுந்து செல்லை எடுத்தாள்.
"ஹலோ...! வர்ஷினி அம்மா இருக்காங்களா ?
நாங்க ஸ்கூல் -ல இருந்து பேசுறோம் ...!"
ஷாக் அடித்தாற்போல் இருந்தது சௌந்தரிக்கு !
நான் ....நான் ....வர்ஷினி அம்மா தான் பேசுறேன் ...!"
"மேடம் ...!உங்களை ஹெட் மிஸ்டிரஸ் உடனே ஸ்கூலுக்கு வரச் சொன்னாங்க ....! கொஞ்சம் சீக்கிரம் வாங்க ...!" கால் கட் ஆகி விட்டது .
குப்பென்று வியர்த்தது சௌந்தரிக்கு !
"ஐயையோ .... செண்டம் எடுக்கணும்னு ஆசப்பட்டு
ஃபார்முலா எழுதி கொடுத்து விட்டோமே ! பாவம் வர்ஷினி மிஸ் கிட்ட மாட்டிட்டிருப்பாளோ ?
வேண்டாம்மானு சொன்னாளே ...! நான் தானே கம்பல் பண்ணி எழுதினேன் ! எல்லா பிள்ளைகளும் என் பொண்ண என்ன நெனைப்பாங்க ? எக்ஸாம்
எழுதவிடாம வெளிய முட்டிக்கால் போட வச்சிருப்பாங்களோ ?"
கண்களில் நீர் முட்டியது.
"பிள்ளையாரப்பா ! தெரியாம பண்ணிட்டேன்ப்பா ...! இனிமேல் பேராசப்பட்டு அப்படி பண்ண மாட்டேன் .இந்த தடவை என்ன மன்னிச்சிடுப்பா ...!"
தலையை வாரி டிரஸ் மாற்றிக் கொண்டு பதை பதைத்த நெஞ்சத்துடன் கிளம்பினாள். ஸ்டூடண்ட்ஸ் எக்ஸாம் எழுதிக் கொண்டிருந்தார்கள் .ஸ்கூலே அமைதியாய் இருந்தது . செவன்த் 'ஏ ' கிளாஸ் நெருங்கும்போதே
மனம் திக் திக் என்று அடித்துக் கொண்டது .கிளாஸில் வர்ஷினி இடத்தில் அவளைக் காணவில்லை .
வர்ஷினி கிளாஸ் மிஸ் சௌந்தரியைப் பார்த்ததும் ,"மேடம் ! கெஸ்ட் ரூமுக்குப் போங்க ...பேப்பர் கொடுத்துட்டு வந்துடறேன் ...!"
கெஸ்ட் ரூமில் வர்ஷினி கண்ணைக்கசக்கி கொண்டு ஒரு ஓரமாய் உட்கார்ந்திருந்தாள் .
சௌந்தரிக்கு பிரஷர் விர்ரென ஏறியது. இதயம் படக் படக் என அடித்தது .
வேகமாக வந்த வர்ஷினியின் கிளாஸ் மிஸ்
"மேடம் ...கங்கிராட்ஸ்....! உங்க பொண்ணு ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டா !எக்ஸாம் நடந்திட்டு
இருக்கிறதால யார் கூடவும் அனுப்பி வைக்க முடியல ...அதனாலதான் உங்கள வரச் சொன்னோம் ...! வர்ஷினி எப்பவுமே பெஸ்ட் ஸ்டூடண்ட் தான் !எக்ஸாம் எழுதலெனா பரவாயில்ல ...!"
அப்பாடா ....!மூச்சு வந்தது ...சௌந்தரிக்கு !
எதிரில் போட்டோவில் இருந்த பிள்ளையார்
அவளைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது சௌந்தரிக்கு .....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Sep-13, 7:16 pm)
பார்வை : 235

மேலே