[501] குழுக்களாய் முன்னே செல்வோம்..!

[501] குழுக்களாய் முன்னே செல்வோம்!

----------( ஆசிரியப் பாவினம்)-----------------
நேரு வேலை வாய்ப்புத் திட்டம்
கூறி அழைத்துக் கொடுத்த வேலையைச்
சீருடன் செய்து சிறப்புடன் முடித்து
நேரிய வழியில் நிதம்பெறும் கூலி
சேரிடம் மதுக்கடை இலதாய், உள்ளம்
தேரிய மக்கள் திருந்திய பேராய்,
வாரி முடித்து,அவர் வாரிசுக ளுடனே
பூரித் திருக்கும் பூவையர் கைகளில்,
சேர்த்து மகிழும் சிறப்பினைப்
பார்த்தெம் மனமும் பரவசம் உறுமே!

------------(அறுசீர் விருத்தப் பாவினம்)-------
நாட்டிலே ஆட்சி செய்வோர்
-நலம்பல பெருகும் வண்ணம்
கூட்டிடும் திட்டம் எல்லாம்
-குறித்தவா றெடுத்துச் செல்ல
நாட்டமும் மக்கள் கொள்ள
-நன்மைகள் விலகிப் போமோ?
கோட்டமும் மனத்து நீக்கிக்
குழுக்களாய் முன்னே செல்வோம்?
*** *** *** ***

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (10-Sep-13, 11:40 am)
பார்வை : 168

மேலே