+என் இதயத்திற்கு கொள்ளி அல்லவா வைத்தாய்!+

நடுநிசியில் திடீரென்று
நித்திரையைத் தொலைத்தேன்!
எங்கெங்கு நோக்கினும் கருமை!
அதில் எனக்கு கிடைத்ததோ வெறுமை!
முன்னிரவு சட்டென்று ஞாபகம் வந்தது!
கண்ணிரெண்டும் பட்டென்று நீரில் மூழ்கியது!
நீ எனைவிட்டு பிரிவதாக சொல்லிவிட்டாய்!
சொல்லிமட்டுமா விட்டாய்
என் இதயத்திற்கு கொள்ளி அல்லவா வைத்தாய்!
பணமிருக்கும்வரை பழகிவிட்டு
புலம்பவிட்டுச் சென்றுவிட்டாய்!
நான் புலம்பி புலம்பி போய்சேருவேன்
என்று மட்டும் எண்ணிவிடாதே!
தாடி வளர்க்கவும், தண்ணி அடிக்கவும்
நானொன்றும் தேவதாஸ் அல்ல!
சாதாரண மனிதன்!
எனக்கொன்றும் வரலாற்றில் இடம் வேண்டாம்!
காதலில் தோற்றபின் பைத்தியமானான் என்று!
காதலில் தோற்றாலும் துவண்டுவிடாமல்
நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்துகாட்டினான் என்று
நான் இருக்கும் வரை உலகம் சொன்னாலே போதும்!
எனக்கு ஒரே ஒரு ஆசை!
அந்த வார்த்தைகள் உன்னை எட்டி
உன்னை வெட்கப்படச்செய்ய வேண்டும்!
அது போதும் எனக்கு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Sep-13, 10:02 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 86

மேலே