யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
அதிகாலையில் துயில் எழுந்து ...
தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் ...
தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை ...
கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ...
தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே
காட்டும் விவசாய பாரதி -நீ
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
கொட்டும் மழையில் உடல்விறைக்க...
உழைப்பாய் - வாட்டும் வெயிலில் ...
குருதியே வியர்வையாய் வெளிவர ....
உழைப்பாய் - நட்டுநடு ராத்திரியில் ...
காவல் செய்யவும் புறப்படுவாய் ..
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
பட்ட விவசாய கடனை அடைக்க
பட்டையாய் உடல் கருகி ....
விற்று வந்த வருவாயை ..
கடனுக்கே கொடுத்துவிட்டு ...
அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!!
அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
உச்ச அறுவடை பொழுதினிலே ...
உச்ச சந்தோசம் பொங்கிடும் வேளையிலே ..
நட்டுநடு ராத்திரியில் அடித்துபெய்யும்...
பேய் மழையால் -அறுவடைக்கு தயாரான ....
விளைபொருள் வெள்ளத்தில் மிதக்கும் .....
அப்போதும் சிரித்தமுகத்துடன் ....
அடுத்த காலத்தை நம்பிக்கையுடன் .....
இருக்கும் -உன் மனதைரியம்உன்னைவிட.....
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
நச்சுபொருளுடன் நாளாந்தம் விளையாடுவாய் ...
இத்தனை துன்பம் வந்தாலும் நச்சு பொருளை....
உண்டு மடியாத -உன் மனதைரியம்...!!!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
காதலில் தோற்றால் நஞ்சு .....
பரீச்சையில் தோற்றால் நஞ்சு.....
நண்பனிடம் சண்டையிட்டால் நஞ்சு .....
இத்தனை துன்பம் வந்தபோதும்.....
தன் கையில் நஞ்சை அருந்தாத......
விவசாய தோழனை - நான் உணவு தரும் ......
கண்கண்ட கடவுள் என்பேன் வணங்குவேன் ...!!!
( இந்த கவிதையை விவசாயிகளுக்கு சமர்பிக்கிறேன் )