புதியதல்ல
கவிதைகள் கோடி
கருத்துக்கள் ஒன்றும்
புதியதல்ல!
கருத்துக்கள் கோடி கோடி
எண்ணங்கள் ஒன்றும்
புதியதல்ல!
எண்ணங்கள் பல கோடி
அனுபவங்கள் ஒன்றும்
புதியதல்ல!
அனுபவங்கள் பற்பல கோடி
நிகழ்வுகள் ஒன்றும்
புதியதல்ல!
நிகழ்வுகள் எண்ணற்ற கோடி
உலகம் ஒன்றும்
புதியதல்ல!