திமிர் - நிலை

தவறிவிழும் நிழலுக்குகூட
தண்டனை தந்தேன்
இடறிவரும் சொல்லைகூட
சிறை பிடித்தேன்
தாமதமாய்வரும் செல்வத்தைகூட
தள்ளி வைத்தேன்
திமிர் - அன்று.

தள்ளிவைத்த செல்வத்தால்-வறுமை
சொல்லிபுரிய வைக்கமுடியாத-முதுமை
நிமிர்ந்துநின்று நிழலையும்
காணமுடியாத-தனிமை
நிலை - இன்று.

எழுதியவர் : அருள் ராம் (15-Sep-13, 3:17 pm)
சேர்த்தது : arul ram
பார்வை : 62

மேலே