அதுக்குமட்டும் இல்லையாக்கும்.!
அதுக்கு மட்டும் இல்லையாக்கும்!
சாதி மட்டும் தொல்லையாக்கும்.!
ஒதுக்குப்புறம் கொல்லையாக்கும்!
அதுக்கப்புறம் எல்லையாக்கும்.!
சாதி சொல்லவில்லையாக்கும்!
சதை கசக்கவில்லையாக்கும்!
மேலுங் கீழும் அல்லலாக்கும்!
கீழும் மேலும் அல்வாவாக்கும்!
வந்தால் வேலை உள்ளவாக்கும்!
தந்தால் கூலி கள்ளமாக்கும்.!
தீண்டல் மட்டும் வெல்லமாக்கும்!
தீண்டாமை இல்லையாக்கும்!.
சகோதரிக்கு இல்லையாக்கும்!
சண்டாளிக்கே உள்ளதாக்கும்!
இல்லாளில் இல்லதாக்கும்!
ஏழையிடம் உள்ளதாக்கும்!
நக்கத்தேனும் இல்லையாக்கும்!
நாயும் நீ பிள்ளையாக்கும்!
வெக்கமதும் இல்லையாக்கும்!
பக்கமாதும் கள்ளமாக்கும்!
குழந்தை பெறவில்லையாக்கும்!
கொஞ்சும் சுகம் உள்ளேயாக்கும்!
மனிதகுணம் இல்லையாக்கும்!
மாவினத்தின் தொல்லையாக்கும்!
கண நேரத் தொல்லையாக்கும்!
காக்கும் பலம் இல்லையாக்கும்!
பெண்ணெல்லாம் தள்ளையாக்கும்!
பேணக்காமம் இல்லையாக்கும்!
கொ.பெ.பி.அய்யா.