உதிர்கின்ற பூக்கள்
பேசிட தோன்றிடும் போசிடாத மௌனங்கள்...,
எண்ணத் தோன்றிடும் எண்ணிடாத கவிதைகள்...,
தண்ணீரில் உப்பும் கண்ணீரில் வாழ்க்கையும்...,
அறியா உலகையும் அறிந்து விலகியும்...,
கண்ட பாதைகளும் விழுந்த வலிகளையும்...,
குற்றும் புற்களும் சுட்றிடும் வார்த்தைகளும்...,
விழியில ஒளியும் மனதில் இருளும்...,
ஈர்க்கும் பருவங்களும் வாங்கிய அடிகளும்...,
பிரிந்த உறவுகளும் உருவாகும் நினைகளும்...,
நடிப்பதற்காக சென்றும் நடிப்பான ஒன்றும்...,
உதிக்கும் பூக்களும் உதிர்கின்ற பூக்களும்...,
பார்வையில் ஒன்றும் சொற்களில் ஒன்றும்...,
செய்த தவறுகளும் செய்கின்ற தவறுகளும்...,
அருகில் சென்றும் அறியாமல் நின்றும்...,
இவையெல்லாம் அறியாத மனதில் உதிர்கின்ற பூக்கள்...!!