விதவை...

தாமரை தொட்டில் கட்டி
தங்கத்திலே நான் பிறந்தேன்
செல்லமகள் சீராக...
கால் வலிக்க நடை பழகி
கொலுசு கண்டேன் தங்கத்திலே ..
பள்ளி செல்லும் வேளையிலே
சீமாட்டி போல வந்து
இறங்கினேன் குதிரை வண்டியிலே..
தோழி கை கோர்த்து
யாரும் இல்லா நேரத்திலே
கள்ளி செடி பெயர் எழுத்து
ரசிதேனடி இளமை கண்டு...
ஆளாகி நின்றேனடி
பருவத்திலே பக்குவமாய்...
மாமன்காரன் குச்சு கட்ட
வெட்கம் கண்டேன் மென்மையாக ...
உலக்கை தாண்ட சொல்லி
மாமனை பார்த்தேனடி
தலைகுனிந்து ஒருமுறை ரசித்தபடி ...
அப்போது கண்டேன்
காதல் இதுவென்று..
நாளாகி சென்றதடி
மாமனை மணந்தபோது ...
முதலிரவில் நான் அடைந்தேன் இனிமையான
பெண்மையை என் மேனியில்
அவர் கை பட்ட போது...
உலகம் மறந்தோம் இருவரும்
இருளிலே தனிமை கண்டு ஓருடலாய் ...
ஓரிரு வாரம் கடந்து
எமனை கண்டேன் கனவிலே ....
என் கனவும் பலித்ததடி
என் கணவர் இறந்தபோது .....
ஒருவரிடம் ஓட வில்லை
தனிமையில் இன்று தனிமரமாக ....
இளமை வேட்கை கண்டு
பலமுறை நீராடி போக்கிகொண்டேன் இரவிலே ....
கட்டுடல் கலையும்முன்னே
கட்டிக்கொண்டேன் வெள்ளையினை ...
கோவில் சென்றால் வாசலிலே மல்லிகைபூ
ஆசை கொண்ட மனது தோற்றதடி
மாற்றாரை காணும்போது ...
கடை வீதி செல்லும் போது
என்னை பார்க்காத காளையர் எங்கே ...
இரவில் உறக்கமில்லை
தனிமை நேரும்போது ...
என் தாகம் அறிய யாரும் உண்டோ
என் வேட்கையோடு விளையாட ....
பட்ட மரத்திலே நீர் ஊற்ற
நீ வருவாய்
மீண்டும் நான் ( பூ ) பூக்க............. !

எழுதியவர் : இந்திரஜித் (30-Sep-13, 7:11 pm)
Tanglish : vithavai
பார்வை : 84

மேலே