வறுமை
"பிஞ்சுகள் சிரித்தால்
பித்தங்களும் கரைந்துபோகும்
சிரிபதற்கு பலமிருந்தால் "
பசி வந்தால் சோறூட்ட தாயில்லை
வந்த பசி போக்க உணவுமில்லை
உணவு கொள்ள பணமில்லை
பணத்தை சம்பாதிக்கும் வயதில்லை
பசியை சொல்லும் வழியுமில்லை
குடல்களுக்குள் பசி யுத்தம் நடக்க
வலிகள் சொல்லமுடியாமல் உதடுகள் திணற
கன்னத்தில் நீர் வழிந்தால்
கைகொண்டு துடைக்க பெலமில்லாமல்
கண்களுக்குள் கண்ணீரை சிறைவைத்து
தலைசாயக்க இடமின்றி
தமக்கை மடி சாய்ந்த
தமையன் கண்விழித்தால்
பசியோடு காத்திருக்கும்
பிஞ்சு வயிற்றை பசியாற்ற
பழைய தெனினும் தரமாட்டார்களா
என பசியிலும்
பாசப் போராட்டம் நடத்துகிறாள்
கந்தளாய் தோன்றும் சிறுமி
ஒரு ரூபாய் கொடுத்தால்
ஓராண்டுகாலம் சிரிப்பாளே
பத்து ரூபாய் கொடுத்தால்
பவளம் போல் ஜொலிப்பாளே
கோடிகளில் பட்டுடுத்தும் பெருந்தகையே
இவளின் வறுமை நீக்க ஓரணா போதுமே
மனதோரம் பாசம் நிரம்புமோ
இவளின் வறுமை தீருமோ
வாரீரோ வறுமை ஒழிப்போம்
"பிச்சை அல்ல இது பிழைப்பு "