கனவுகள்
வறண்ட வானத்தின்
நடுவே
அவபோது வந்துபோகும்
வானவில் போல
வறட்சியான
வாழ்க்கையின்
இரவுகளில்
வந்துபோகிறது கனவுகள் !
ஏக்கங்களிலும்
எதிர்பார்ப்புகளிலும்
வாழ்ந்து மடியும்
மனிதனுக்கு
எள்ளளவு நம்பிக்கையை
எப்போதும்
கொடுக்கிறது கனவுகள் !
வண்ணத்துபூச்சியாய்
வாழ்க்கை
பறந்துக் கொண்டிருந்தாலும்
அதன்
வண்ணங்கள்போல
நம்மை
தொடர்கிறது கனவுகள் !
நிலவைகாட்டி
சாதம் ஊட்டும் தாயைபோல
வாழ்க்கையை
ஊட்டுகிறது மனம்
இந்த கனவுகளைகாட்டி !
மண்ணில்
விழுந்த விதைபோல
மரமாய் வளர்கிறது
மனதில்
விழுந்த என் கனவுகள் !!!