அன்பே உலகம்
விதைகள் வேர் ஆகிறது
மரங்கள் நிழலாகிறது
காய்கள் கனிந்து
நாவிற்கு சுவையாகிறது
ஊனை உடைத்த உயிர்
உதவும் குணம் கொண்டால்
அன்புதான் உலகம்
ஏறும் கோபம் இறங்கி
சாந்தம் கொண்டால்
அன்புதான் உலகம்
தூசிகள் நீங்கிய
தூய்மை வீடு கொண்டால்
அன்புதான் உலகம்
களவு பிளவில்லா
காருண்ய காதல் கொண்டால்
அன்புதான் உலகம்
வாதங்கள் இல்லா
வேதங்கள் கொண்டால்
அன்புதான் உலகம்