இயற்கை அன்னையே


எங்கும் காணும்
இயற்கை அன்னையே
என் இதயம் போற்றும்
அனுதினம் உன்னையே
காற்றை தந்தாய்
நீரை தந்தாய்
அன்னம் தந்தாய்
உயிர்கள் வாழ
அனைத்தும் தந்தாய்
பாழும் மனிதனுக்கு
அறிவையும் தந்தாய்
அதனால் விளைந்ததோ
ஆயிரம் தொல்லை
தன் தலையில்
தானே போட்டான் கல்லை
அனைத்தும் தனதென
ஆளுமை கொண்டான்
தான் தான் வல்லவனென்று
ஆணவம் கொண்டான்
அறிவியல் கொண்டு
கருவிகள் செய்தான்
உன் வளங்களை சுரண்டி
வனங்களை அழித்தான்
மூச்சு காற்றை
நச்சு காற்றாய் நசித்தான்
எக்காலம் கடந்தாலும்
மக்காத குப்பைகளால்
மண்ணின் மடியின்
தண்ணீர் தொலைத்தான்
இத்தனை குற்றமும்
மொத்தமாய் செய்தவன்
சற்றும் வெட்கமின்றி
குற்றம் சாட்டினான் உன்னை
மழை பொய்த்தாய் நீயென
நிலம் பிரண்டாய் நீயென
தன்னையே மறந்தவன்
உன்னையே சபித்தான் ...!

எழுதியவர் : பகவதி செல்வம் (8-Jan-11, 10:46 am)
பார்வை : 461

மேலே