அன்பு வைப்பதே பாவமடி கிளியே !!!!
அன்பு வைப்பதே பாவமடி கிளியே !
என்னுயிராய் இருந்த இவனுக்கு
நான் என்ன பாரமா ???
நான் அவமானப் படுவதும்
சித்திரவதை படுவதும் அதைக்
கண்டு இரசிப்பதும் இவனது பொழுது போக்கா ??
இவனை மறக்க நினைக்கிறேன் ; முடியவில்லை ;
இறக்க நினைக்கிறேன் ;இறைவன்
மனம் வைக்க வில்லை ;
எவளோ ஒருத்திக்காக இவன் தன்
உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறானாம் !
என் மனதும் உடலும் இவனக்கு வேண்டும் ;
வேண்டும் வரை நாயாக மாறி
குதறி எடுத்து விட்டு இன்று
வேறுருத்தியின் வாழ்க்கையை
நாசப்படுத்த காத்திருக்கும் இவனிடம்
அன்பினை எப்படி வைப்பது ??
அன்பினை எப்படி எதிர் பார்ப்பது ??
மோசமான உலகத்தில் பாவத்தின்
சின்னம் தான் நான் ;இவனுக்காக நான்
வாங்கிய அடிகளும் திட்டுகளும் ஏராளம் !
யாருமே எனக்கு வேண்டாம் ;
யாருடைய வாழ்க்கைக்காகவும் நான்
போராடத் தயாராய் இல்லை ;
என் வாழ்க்கையில் நீ யார் தலையிட
என்ற கடுஞ் சொல்லை சொன்ன பின்
அவன் வாழ்க்கைக்கும் எனக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை ;
என் வாழ்விலிருந்து அவனுக்கு
முற்றுப் புள்ளி வைக்க மனமின்றி
அவனே எனக்கு என்றும் வேண்டும்
என்று ஏங்கித் தவிக்கும் அபலை நான் !!
அன்பு வைப்பதே பாவமடி கிளியே !