நல்லது நடக்கும்!
நேற்றைய இருளின் மிச்சம்
இன்றைய விடியலில்!
நாளைய ஒளியின் சொச்சம்
இன்றைய இருளில்!
உள்ளுக்குள் எண்ணியதே
வெளிப்படும் செயலாக!
உயிருக்குள் நுழைந்ததே
வெளிவரும் உணர்வாக!
நல்லவைகளுக்கு இடந்தந்தால்
தீயவைகளுக்கு இடமிருக்காது!
நன்மைகளை வளர்த்துவிட்டால்
தீமைகள் வளரவழியிருக்காது!
துன்பங்கள் துயரங்கள்
தானே வருவது!
இன்னல்கள் இம்சைகள்
வரவழைத்துக்கொள்வது!
நல்லதை நோக்கிபயணித்தால்தான்
நல்லது நடக்கும்!
இன்பத்தை தேடிபின்தொடர்ந்தால்தான்
இனிமை சேரும்!