உயிர் பெறுகின்றன அன்பே

உன் நினைவோடு வாழ்வது
போதாது என்று
நினைவு பொருளையும்
தந்து கொல்லுகிறாய் ....

வீட்டார் யாரும் இல்லை
என்று நினைத்து
எத்தனை முறை -உன் நினைவு
பொருட்களுடன் கதைத்து
தம்பி தங்கையுடன்
கிண்டல் வாங்கினேன்
தெரியுமா ....?

நீ நினைவு பொருளாக தருகிறாய்
என்னிடம் வந்து அவை
உயிர் பெறுகின்றன அன்பே ....!!!

எழுதியவர் : கே இனியவன் (26-Oct-13, 12:09 pm)
பார்வை : 77

மேலே