கண்ணாடி சிறைகளுக்குள் நான்
உள்ளே
கண்ணாடி சிறைகளுக்குள் நான் ...
வெளியே ...
எனை வழி அனுப்ப வந்த என் உறவுகளோ..
கண்ணிற் துளிகளுடன்.....
இனி ஒருமுறை இறைவன்
இந்த உறவுகளை காண
வரமருள்வரோ .....என
எண்ணிலங்காத கேள்விகளுடனேதான்
தொடங்குகின்றது.... எந்தன்
வேலைக்கான வெளிநாடு பயணம் அது ....