தாயன்பு

தாயன்பு
**************
தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள்.அவள் குழந்தை பக்கத்தில் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது.வேலை மும்மரத்தில் தாய் சிறிதுநேரம் குழந்தையைக் கவனிக்க வில்லை.திடீரென ஞாபகம் வந்து பார்த்தபோது குழந்தை கைபிடியில்லாத ஒரு கிணற்றின் விளிம்பருகே நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள்.அடுத்து ஒரு அடி எடுத்து வைத்தாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும்.கூட இருந்தவர்கள் பதைபதைத்தார்கள்.தாய் சிறிது கூட யோசிக்காமல் கொஞ்ச தூரம் மெதுவாக நடந்துசென்று,குழந்தையைப் பார்த்து,''பாப்பா,அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டேன்.நீ வருகிறாயா,இல்லையா?''என்று சப்தம் போட்டு சொன்னாள்.அடுத்த நிமிடம் குழந்தை திரும்பிதாயைப் பார்த்து ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டது.தாயன்பு தானே அந்த இக்கட்டானநேரத்தில் சமயோசிதமாக சிந்திக்க வைத்தது.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்

எழுதியவர் : கே இனியவன் (30-Oct-13, 4:43 pm)
பார்வை : 82

மேலே