உன்னை பற்றி
மனிதன்
இது ஆத்மாவின்
இன்றைய கூடு!
ஆத்மாவிற்கு
அழிவில்லை என்கிறது
இந்து மதம்!
பாவத்தின் சம்பளம்
மரணம் என்கிறது
கிறிஸ்துவம்!
ஆசைதான் அழிவுக்கு
காரணம் என்கிறது
புத்த மதம்!
கி.மு கி.பி என்று
காலத்தை கணக்கிட்டவன்
மனிதன் !
ஆனால் உன்
பிறப்புக்கு முன்னே
இறப்புக்கு பின்னே
என்ன உண்டு சொல் !
நேற்று என்பது அனுபவம்!
இன்று என்பது நிஜம்!
நாளை என்பது கற்பனை!
உன் முப்பாட்டன் உடலில்
உன் உயிர் எது!
அதற்கு முன்னே
நீ என்னவாக இருந்தாய்!
இறந்து போனால்
எங்கே போகிறாய்?
எரித்தால் ஒருபிடி
சாம்பல்!
புதைத்தால் குப்பை
இதுதான் நிஜம்!
பூமியின் வாழ்நாள்
பல மில்லியன்
ஆண்டுகள்!
உன் வாழ்நாள்
எத்தனை காலம்?
இருக்கும் போதே
இறந்தவர் பலகோடி!
இறந்த பின்னரும்
இருப்பவர் சிலர்தானே!
வயிறு பசிக்கும்வரை!
இதயம் துடிக்கும்வரை!
நீ சுவாசிக்கும்வரை
உலகம் உன்னுடையது!
நின்று போனால்
உன் உடல் மண்ணுடையது!
மனிதனே உனக்கு மட்டும்
ஒரு வாய்ப்பு உண்டு!
காற்றோடு கலந்து போகலாம்
கடலோடு உறவாடலாம் !
நீ இயற்க்கையகலாம்!
ஆம் ! மனிதா
மனிதனாக வாழ்ந்துவிட்டால்
மகாத்மாவை ஆகலாம்!
* * *