29 -தந்திர காட்டில் நான் 4-உள்முக தரிசனம் கார்த்திக்

தத்துவதரிசனம் (17)

ஊருக்கு உபதேசம் செய்வதை
காட்டிலும் -உனக்கு நீயே
உபதேசம் செய்துகொள் ;
ஊருக்காய் வாழ்வது என்பதின்
முழு அர்த்தம் உன்னை நீ
ஸ்படிகம் போல தூய்மையாக்கி
கொள்வதில்தான் இருக்கிறது

தத்துவதரிசனம் (18)

உலக வாழ்கையில் இரண்டு
குணவகையினரே உள்ளனர்
ஒன்று உலக வாழ்கையை வெறுத்து
காட்டுக்குள் ஓடி காணமல் போனவர்கள் ;
இன்னொன்று வாழ்கையை தொலைத்து
நாட்டுக்குள் அலைந்து இடுகாட்டுக்கு
போனவர்கள் ;
இவர்கள் இருவருமே ஏமாளிகள்தான்
வாழ்கையை தொலைத்தவர்கள்தான்
என்பதை அறிந்து கொள்
வாழ்கையை விட்டு ஓடுவது யோகமாகாது
வாழ்க்கைக்குள் ஓடுவதுதான் யோகமாகும்
ஏமாற்றத்துக்கும்-ஏற்றத்துக்கும் மத்தியில்தான்
வாழ்க்கை இருக்கிறது அதை உணர்வதே
யோகமாகிறது அதிலிருந்து ஞானம்
ஜனிக்கிறது

தத்துவதரிசனம் (19)

உன்னை சுற்றி இருப்பது அனைத்தும்
மாயைகள் என்பதின் அர்த்தம்
உன்னை அககுருடாக்குவது கண்டு
தெளிந்துவிடு
எது மாயை,புலனின்பம் மாயையா ?
உணர்வுகள் மாயையா?
இந்த இயற்கை மாயையா?
அது நல்கும் பரவசம் மாயையா ?
கலைகள் மாயையா ?
காற்று மாயையா ?
எல்லாமே நிஜமென உணர்ந்துவிடு
எதுவும் மாயையல்ல-
அனைத்தும் இறை துகளின்
நாட்டியம் ,சக்திகளத்தின் தோற்றம்
சத்தியத்தின் சாயல்
நீ சத்தியத்தை அறிய வேண்டுமா
அதோ அந்த அருவியின் நீர் வீழ்ச்சியை
கண்டு அதோனோடு உள்ளத்தால்
நீயும் கலந்துவிடு
சூரியனின் உதயத்தில் உன்னை
இணைத்துவிடு ;குளிர் காற்றின்
தீண்டலில் நீ கரைந்துவிடு அங்குதான்
சத்தியம் இருக்கிறது ;இப்போது
சொல் இவ்வுலகம் மாயையா ?


************(தத்துவதரிசனம் தொடரும் )***********

என்றென்றும் அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (10-Nov-13, 3:47 pm)
பார்வை : 103

மேலே