சுபாஷ் சந்திர போஸ் *

மறக்க பட்டது உன் பெயர்
மாறி விட்டது சுதந்திரம்
விடுதலைக்கு வேண்டுகிறோம்
விரைவாக பிறந்து வா

கொடி நிறம் முழுவெள்ளை
கோடி சுமத்தும் பிணங்களையே - உன்னால்
வீர மரணமாய் இராணுவத்தில்
வெற்றிக்கு போர்த்தியது மூவண்ணம்

நாட்டுக்கு உயிர் அற்பணிதாய்
நன்றி மறப்பது சடங்களுக்கு
கண்ணீர் விடுவது உதடுகளும்
கைகள் தொழுவது உன் காட்சிக்குத்தான்

*பிறமொழி பெயர்ச்சொல்

எழுதியவர் : . ' .கவி (24-Jan-11, 11:06 am)
பார்வை : 1333

மேலே