மாலை பொழுது

சுடும் சூரியனுக்கு ஓய்வளித்து
விண்ணில் ஒளிந்திருக்கும் நிலவை
வரவேற்கும் மாலைப் பொழுது .
கூடு திரும்பும் பறவைகளின்
வருகையைக் காண காத்திருக்கும்
மாலைப் பொழுது ..
சூரியனும் முக்குளிக்க ஆசைப்பட்டு
கடலில் முழ்கும் பொழுது ...
உழைத்து களைத்தவர்கள் இளைப்பாற
இயற்கை அன்னை இனிய
தென்றலை வீசும் மாலை ....
அடிமைகளாய் , கைதிகளாய் அலுவலகங்களில்
காலை முதல் அடைபட்டிருந்தவர்கள்
விடுதலை அடைந்து விடு திரும்பும்
இனிய மாலை ......
சாலையோர அங்காடிகளில் சூரியனின்
உறவினர்கள் கண்விழிக்கும் நேரம் ......
அன்பே நீயும் நானும்
நம் காதலை பகிர்ந்து கொண்ட
இனிமையான அதே மாலைப் பொழுது .......

எழுதியவர் : (26-Nov-13, 7:15 pm)
Tanglish : maalai pozhuthu
பார்வை : 3841

மேலே