கை மீறிய காதல்
அர்த்த இருப்பு
பார்வை மாறல்கள்
தீண்டிய கனாக்களில்
ஓர் மீள்பரீட்சை..!
நேற்றைய வியாபகங்களுக்கு
ஓர் புதுமை விளக்கம்...!
அன்புக்கும் ஓர்
தவணை விடுமுறை...!
வெள்ளியில் சொடிக்கிய மனது
(இன்று) தங்கத்தில்
தவழ முனைகிறது...!
பழைமையின் இருப்பிடங்களுக்கும்
இரசீது
ஏல விற்பனைக்கு....!
தொலைந்திட்ட புன்னகைகளுக்கும்
ஓர் கைவிலங்கு....!
காரியக் கைதட்டல்களுக்கும்
கதவடைப்பு...!
வானவில்லின் சாயங்களுக்கும்
சலவைக்கழுவல்...!
பரிதவிக்கின்ற மழை விழிகளுக்கு
வெள்ள நிவாரணம்...!
பேசாத மௌனங்களுக்கு
மரணத்தூது....!
சிறகொடிந்த இதழ்களுக்கு
இரங்கற்கூட்டம்....!
என்னவெனபது உ(ந்த)ன்
சாலைத்திருப்பங்களின்
சமத்துவங்களை....!
அள்ளிப் புதைகிறது மனது...!
இருந்தும் மறுக்காதே
என்னவனே
கை மீறிய காதலால்
தோற்றுப்போன எ(ந்த)ன்
நேற்றைய கனாக்களை.....!