Kadhal

அவளுக்கான கவிதை எழுதும்பொழுதுதான்
என் வார்த்தைகளுக்குள் வாழ்வு நிரப்பப்படுகிறது

உன் கூறிய விழிகள்
என்னை கொக்கிடும் வேளையில்
வாழனினைத்தவன் ஏனோ வாய்ப்பிழக்கிறேன்

என் ஈரனினைவுகளில் இயல்புற்றவள்
ஏனின்று என்னை உயிர்க்கொள்கிறாள்.

என் இரவுகள் மரணிக்கும் வேளையில்
உன் கனவுகள் என்னைக்காலம் கடத்தும்.

நினைவுத்தப்பாதிருக்கிறேன்
நீ என்ற உன்னில் இறக்கும்வரை.

வேண்டுதல் என்பதில் விருப்பங்கொள்ளாதவன்
உன்னையாய் கோலம் கண்டுள்ளேன்
ஒரு கருமியாய் காதல் கொண்டுள்ளேன்.

நான் ஒரு
இதய ஏழை
என்னால் இதயங்களாலான
காதல்களை வாரி இறைக்கமுடியாது

அதுவாக
நிறைந்துவிட்டுப்போகட்டும்
வழியவிட வாழ்க்கையில்லை எனக்கு.

உனக்கு கொடுப்பதாய் கொண்டுள்ளேன்
இதயம் - உண்மையில் உன்னை நிறைத்து.

உன்னால் உண்மை நிரப்பியதால்
சதைக்கூடு இதயமாகிறது.

என்னிதயம் உன் வடிவமானது
வேண்டுமானால் கண்ணாடியைக் காண்!.

ஏனோ தெரியவில்லை,
இன்னமும் தெளியவில்லை!,
என்னிதயமும் மரண்மும் கண்ணீர்க்கொண்டே வாழ்கிறது

இதனாலென்னவோ
பல மரணங்கள் பல இதயங்களைக்கடந்தாலும்
இன்னமும் மரணங்களை இதயம் வெல்கிறது!

இரண்டும் ஒன்றையொன்று ஊடுருவியவாறே
உலகம் கொள்கிறது

இதயம் கொண்டவர்களை மரணம் கொள்ளும் பொழுதுதான்
காதல் கொள்கிறது

காதல் என்னை விழுங்கி
உன்னை உமிழ்ந்திருக்கிறது

உன்னினைவுகள் தின்ற மிச்சம் போக
கனவுகள் விற்ற எச்சம் போல
நானும் என் காதலும்...

என் காதல்
கல்லில் இருக்கும் சிலைப்போன்றது

என்னை செதுக்கி
உன்னை உருவாக்கியதே இந்தக்காதல்

எழுதியவர் : ராமசந்திரன் J (30-Nov-13, 11:16 pm)
சேர்த்தது : ramj
பார்வை : 70

மேலே